இதுக்கு என்னை கொன்றிருக்கலாமே? கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டது எப்படி என அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்ணிற்கு எச்ஐவி ரத்தத்தை செலுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அந்த ரத்தம் எப்படி கர்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 24 வயதான மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

உடல்நலக்குறைவின் காரணமாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவருக்கு, கடந்த 3-ஆம் திகதி இரத்தம் செலுத்தப்பட்டது.

அந்த ரத்தம் சிவகாசி அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்டது என்பதும், அதில் எச்.ஐ.வி. கிருமி கலந்து இருப்பதும் தெரியவந்தது, பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த கர்ப்பிணி ஒரு தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், எனக்கு ரத்த பரிசோதனை எடுத்தனர். நான் எதற்கு என கேட்டதற்கு எப்பவும் எடுப்பதுதான் என்றார்கள்.

மறுநாள் எனது கணவருக்கும் ரத்தப் பரிசோதனை எடுக்க வேண்டும், அதனால் அவரை வரசொல்லுங்கள் என்று கூறினர். நானும் என் கணவரிடம் கூறினேன்.

ரத்த பரிசோதனை எடுத்தவுடன் எனக்கு எச்ஐவி கிருமி இருப்பதாக என்னிடம் வந்து சொன்னார்கள். மிகவும் மனவேதனை அடைந்தேன். இந்த வியாதியை எனக்கு கொடுத்தது தமிழக அரசுதான். நான் தெருவில் நடக்கும் போது என்னை பிறர் பார்ப்பது என்னை ஒதுக்கி வைப்பது போல் இருக்கிறது.

நான் சிறுவயதில் இருந்து ஒரு ஊசி கூட போட்டதில்லை. இது போல் எச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றிய அரசு, அதற்கு பதில் எனக்கு விஷம் ஊசி போட்டு கொன்றிருக்கலாம் என்று கண்ணீர் விட்டு அழுதார்.

இந்நிலையில் இது குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கடந்த 2016-ஆம் ஆண்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்த சாத்தூர் இளைஞர், அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு ரத்தம் தேவைப்பட்டதால் ரத்ததானம் செய்துள்ளார்.

பின்னர் அவர், வெளிநாடு செல்வதற்காக மதுரைக்கு வந்து மீண்டும் ரத்த பரிசோதனை செய்தபோது, அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அவர் மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டார். அவர் கொடுத்த எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் அவருடைய உறவினர் பெண்ணுக்கு செலுத்தவில்லை என்று தெரிவித்த மருத்துவமனை ஊழியர்கள், அந்த ரத்தம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அந்த ரத்தம் யாருக்கு ஏற்றப்பட்டது என்பதை விசாரிக்கும் போது அது சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers