திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: 17 வயது சிறுவனின் வெறிச்செயல்

Report Print Raju Raju in இந்தியா

புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண், கொடூரமாக கொலை செய்யப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் ஒருவனை கைது செய்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு அடுத்த மாதம் 27ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 18ஆம் திகதி அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் பெண்ணின் எதிர்வீட்டைச் சேர்ந்த இளைஞர், உறவினர் மகன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இளம்பெண்ணின் வீட்டுக்கு அருகே புறா வளர்ப்பில் ஈடுபட்டு வந்த 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், சம்பவத்தன்று பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்துவிட்ட புறா ஒன்றைப் பிடிக்க சிறுவன் மாடி வழியாகச் சென்றபோது, இளம்பெண்ணுக்கும் சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

தகராறு முற்றி இளம்பெண்ணை சிறுவன் தாக்கியதில் அவர் இறந்ததாகவும் அதன் பின்னர் சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் ராகுல் அல்வால் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers