இந்தியாவில் பாம்பு பிடிப்பவர் ஒருவர் நாகப்பாம்பை பிடித்த நிலையில், அவரை அந்த பாம்பே கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் நெரில் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா (38). பாம்பு பிடிப்பதில் கில்லாடியான இவர் அந்த பகுதியில் யார் வீட்டில் பாம்பு இருந்தாலும் சென்று பிடித்து விடுவார்.
இந்நிலையில் ராமஷெட்டி என்பவரது வீட்டில் நாகப்பாம்பு ஒன்று இருப்பதாக கிருஷ்ணாவுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு சென்ற கிருஷ்ணா பாம்பை லாவகமாக பிடித்த நிலையில் அதை காட்டுப்பகுதிக்குள் விட சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஆக்ரோஷமான பாம்பு கிருஷ்ணாவை கடித்தது.
பின்னர் பாம்பு மாயமான நிலையில், கிருஷ்ணாவை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணா உயிரிழந்தார். இதனிடையில் கிருஷ்ணாவை கடித்த பாம்பை மீண்டும் ஊர் மக்கள் பார்த்துள்ளனர்.
இதையடுத்து கற்கள் மற்றும் கொம்பால் பாம்பை அடித்து மக்கள் கொன்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.