இண்டர்நெட் காதலால் பெற்ற தாயை கொன்ற மகள்! தலைமறைவான காதலன் அதிரடி கைது

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் பேஸ்புக் காதலுக்காக தனது தாயை மகளே கூலிப்படை ஏவி கொலை செய்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் தேவிப்பிரியா என்ற கல்லூரி மாணவி, இன்ஸ்டாகிராம் மூலமாக கும்பகோணத்தைச் சேர்ந்த விவேக் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த தேவிப்பிரியாவின் தாய் பானுமதி மகளை கண்டித்துள்ளார். அதன் பின்னர், தனது காதலுக்கு தடையாக இருப்பதாக நினைத்து, காதலன் விவேக்கின் நண்பர்கள் சதீஷ், விக்னேஷ் ஆகியோரின் மூலம் தேவிப்பிரியா தனது தாயை கொலை செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் மூவரையும் பொலிசார் கைது செய்தனர். ஆனால், தேவிப்பிரியாவின் காதலன் விவேக் தலைமறைவானதால் பொலிசார் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் தடா அருகே தனிப்படை பொலிசார் விவேக்கை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...