பிரபல நடிகர் கவுதம் மரணம்: அதிர்ச்சியில் சக நடிகர், நடிகைகள்

Report Print Raju Raju in இந்தியா

பிரபல சின்னத்திரை நடிகர் கவுதம் டே தனது 65வது வயதில் காலமானார்.

பெங்காலி சின்னத்திரை தொடர்கள் பலவற்றில் நடித்து மக்களிடையே புகழ்பெற்றவர் கவுதம் டே.

கவுதம் நடித்த ராஜா, ராணி ராஷ்மோனி போன்ற தொடர்கள் இவருக்கு நல்ல பெயர்களை பெற்று தந்தது.

சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கவுதம் அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவுதம் நேற்று உயிரிழந்தார். உயிரிழந்த கவுதமுக்கு மனைவியும், மகளும் உள்ளனர்.

கவுதமின் மறைவு சக நடிகர், நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

அவருடன் நடித்த நடிகை திதி பிரியா கூறுகையில், கவுதமிடம் இருந்து பல விடயங்களை நான் கற்று கொண்டேன், உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தாலும் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் அவர் வந்துவிடுவார் என கூறியுள்ளார்.

இதே போல பல நடிகர், நடிகைகள் கவுதம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers