தூக்கில் தொங்கிய கர்ப்பிணி பெண்! கணவரே கொன்றது அம்பலம்- விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் ஒரு பவுன் தங்கத்துக்காக புதுப்பெண் கழுத்தை இறுக்கி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தின் கரிக்காப்பட்டி ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜவேல்(வயது 28), இவரது மனைவி புவனேஸ்வரி(வயது 21), இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்நிலையில் மூன்று மாதங்கள் கர்ப்பமாக இருந்த புவனேஸ்வரி கடந்த 22ம் திகதி தூக்கில் தொங்கினார்.

கணவர்- மனைவி இடையேயான பிரச்சனையின் மன அழுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து புவனேஸ்வரியின், சடலத்தை கைப்பற்றிய பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது தமிழக அரசின் திருமண உதவித்திட்டத்தின் கீழ் பெற்ற ஒரு பவுன் தங்க காசை அவரது பெற்றோர் வீட்டுக்கு வழங்கியதே காரணம் என தெரியவந்தது.

இதுகுறித்து புவனேஸ்வரியிடம், அவரது கணவர், மாமனார், மாமியார் சண்டையிட்டதுடன் காசை வாங்கி வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

சம்பவ தினத்தன்று கோபத்தில் புவனேஸ்வரியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிவிட்டுள்ளனர்.

தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக தற்கொலை நாடகமும் ஆடியுள்ளனர், இதனையடுத்து மூவரையும் கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...