கைவிட்ட கணவன்! வேறு நபருடன் வசித்து வந்த மனைவி...நேர்ந்த விபரீத சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கணவரால் கைவிடப்பட்ட மனைவி வேறு நபருடன் வாழ்ந்து வந்த நிலையில் அந்த நபராலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் மகபூப்நகரை சேர்ந்தவர் பீமம்மா (35). இவர் தனது கணவருடன் வசித்து வந்த நிலையில் கணவர் பீமம்மாவை கைவிட்டுள்ளார்.

இதையடுத்து ஸ்ரீனிவாஸ் என்பவருடன் பீமம்மாவுக்கு தொடர்பு ஏற்பட்ட நிலையில் அவருடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் பீமம்மாவுக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக, ஸ்ரீனிவாஸுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதோடு ஸ்ரீனிவாஸிடம் அதிகளவு பணம் கேட்டு பீமம்மா தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதனால் அவர் மீது ஆத்திரமடைந்த ஸ்ரீனிவாஸ், பீமம்மாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இது குறித்து அவரின் சகோதரி பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் தலைமறைமாக இருந்த ஸ்ரீனிவாஸை கைது செய்தனர்.

இதோடு பீமம்மா அணிந்திருந்த நகைகளை ஸ்ரீனிவாஸ் திருடியதும் தெரியவந்தது.

அதையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...