பாலுணர்வை தூண்டும் வகையில் திருமண பேனர்! வைரலாகும் மாப்பிள்ளை-மணப்பெண் புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பாலுணர்வை தூண்டும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றிய மாவட்ட நீதிபதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பிறந்த நாள் தொடங்கி இறந்த நாள் வரையில் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பேனா், விளம்பர பலகைகளை வைக்கும் கலாசாரம் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.

அப்படி வைக்கப்படும் பேனர்களால போக்குவரத்து நெரிசல்கள், ஒரு சில நேரங்களில் விபத்துகள் கூட ஏற்படுவதால், பேனா், விளம்பர பதாகைகளை வைப்பது குறித்து நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிக்காக சாலை ஓரத்தில் பிரம்மாண்டமாக பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த வழியாக மாவட்ட நீதிபதி புகழேந்தி சென்று கொண்டிருந்த போது, சாலையில் இருந்த இந்த பேனர்களை பார்த்தபோது, அது சிறுவா்களின் பாலுணா்வை தூண்டும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின் அங்கிருக்கும் மக்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் மாவட்ட நீதிபதி புகழேந்தி பேனா்களை அகற்ற உத்தரவிட்டார்.

மேலும் பேனா்கள் அகற்றப்பட்ட நிலையில் பேனா் வைத்த நபா்கள், திருமண தம்பதியரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அநாகரிகமான முறையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றிய நீதிபதிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers