13 பேர் பலியான துயர சம்பவம்...தமிழகத்தை உலுக்கிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி: பசுமை தீர்ப்பாயம் பரபரப்பு தீர்ப்பு

Report Print Vijay Amburore in இந்தியா

தூத்துக்குடியில் 13பேர் சுட்டுக்கொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்காக அனுமதியினை வழங்கி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் நச்சு அலையால், சுற்றுசூழல் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு அபாயகரமான நோய்கள் ஏற்படுவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சுமத்தி வந்தனர்.

மேலும் அந்த ஆலையினை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 10 கிராம மக்களுடன் சேர்ந்து தொடர் போராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.

அமையான வழியில் போராட்டம் நடந்தும் கூட தமிழக அரசின் மெத்தனத்தினால் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை வீரியப்படுத்தும் விதமாக, ஸ்டெர்லைட ஆலையினை நோக்கி மாபெரும் அமைதிவழி போராட்டத்தினை முன்னெடுத்தனர். ஆனால் அதனை தடுக்கும் விதமாக செயல்பட்ட தமிழக காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தடியடி நடத்தி நடத்தியது.

இது போராட்டத்தினை வேறுவடிவமாக மாற்ற, பொதுமக்களுள் சிலர் பொலிசாரை திருப்பி தாக்க ஆரம்பித்தனர்.

இதற்கு பழிவாங்கும் விதமாக தமிழக பொலிஸார் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் ஈவிரக்கமின்றி சுட்டு படுகொலை செய்தது.

உலகம் முழுவதும் உள்ள தமிழகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பது உண்டாக்கிய இந்த சம்பவத்தில், தமிழக அரசு மாற்று பொலிஸாருக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழ ஆரம்பித்தன.

உடனடியாக அமைச்சரவையை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடுவதற்கான கொள்கை முடிவினை எடுக்க வேண்டும் என பல்வேறு மூத்த அரசியல்வாதிகளும் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் அதில் மெத்தனமாக இருந்த தமிழக அரசு வெறும் அரசாணை வெளியிட்டு ஆலையை மூடியதோடு, ஐ.நாவிற்கே சென்றாலும் இனி ஸ்டெர்லைட் ஆலையினை திறக்கமுடியாது என கூறியிருந்தது.

இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தொடரப்பட்டது. இந்த வழக்கினை இன்று விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவும் பிறப்பித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers