சொந்த தம்பி கழுத்து அறுத்து கொலை செய்த அண்ணன்: சென்னையில் பயங்கரம்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் இருசக்கர வாகனம் கேட்ட தம்பியை அண்ணன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வெங்கடேசனின் தம்பி குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் அண்ணன் வெங்கடேசனிடம், இரு சக்கர வாகனம் வாங்கித் தரும்படி போதையில் தகராறு செய்துள்ளார்.

தம்பியின் செயலால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தன்னிடமிருந்த கத்தியை எடுத்து கணேசன் கழுத்தை அறுத்தார்.

இதில் ரத்தம் சொட்ட சொட்ட வெங்கடேசனின் தம்பி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் பொலிசார் வெங்கடேசனை கைது செய்துள்ளார்கள்.

அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers