எப்படி ஆசைவார்த்தைகள் கூறி பெண்களை மயக்குவார்? இயக்குனர் மோகனைப் பற்றி கண்ணீர் மல்க கூறிய நடிகை

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காஸ்டிங் இயக்குனர் மோகன் எப்படி ஆசைவார்த்தைகள் எல்லாம் கூறி பெண்களை மயக்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் துணை நடிகை ஒருவரும், பட்டதாரி இளம்பெண் ஒருவரும், சினிமா காஸ்டிங் இயக்குநர் மோகன் புகார் கொடுத்தனர்.

அதில், பட்டதாரி இளம்பெண், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இயக்குநர் மோகன் வாட்ஸ்அப்பில் அனுப்பும்படி கூறுவதாகவும், துணை நடிகையின் புகாரில், உடைமாற்றும்போது இயக்குநர் மோகன் தரப்பினர் வீடியோ எடுத்திருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பொலிசார் கூறுகையில், நான் உடை மாற்றியதை காஸ்டிங் இயக்குநர் மோகன் வீடியோவாக எடுத்திருக்கலாம் என்று புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கான ஆதாரங்கள் அவரிடம் இல்லை. பட்டதாரி பெண்ணிடம் விசாரித்த போது,

மோகன், சில ஆண்டுகளாக எனக்குத் தெரியும்.

தனியார் கம்பெனியில் அவர் தான் எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். அண்ணன் என்று தான் அழைப்பேன். அவரும் தங்கச்சி என்று அழைப்பார்.

தனியார் கம்பெனியில் வேலை பார்த்தால் சம்பளம் குறைவாக கிடைக்கும், இதுவே மொடலிங் செய்தால் லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.

அதுதொடர்பாக எனக்குப் பல வாட்ஸ்அப் மெசேஜ்கள் என்னிடம் இருக்கின்றன. அந்த ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.

அந்த ஆதாரங்கள் கொடுக்கும் படி கூறியுள்ளோம். அதன் பின்னரே அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட துணை நடிகை மற்றும் பட்டதாரி பெண் கூறுகையில், பொலிசாரிடம் எங்களுக்கு நடந்த கொடுமைகளை கூறினோம்.

பொலிசார் ஆதாரங்களை கொடுங்கள் என்று கூறினர். நாங்கள் நடவடிக்கை எடுத்தால் ஆதாரத்தை தருகிறோம் என்று கூறியுள்ளோம்.

மேலும் துணை நடிகை மோகன் குறித்து ஒரு முக்கிய தகவலை கூறினார். அதில், நான் அவரிடம் பழகிய போது சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறினார்.

அதை நம்பி அவரின் அலுவலகத்துக்குச் சென்றேன். அப்போது என்னை பல கோணங்களில் படம் எடுத்தார்.

அதற்கேற்ப நானும் போஸ் கொடுத்தேன். அப்போது அடுத்த அறையில் சில மாடலிங் பெண்கள் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர்.

இந்தி, ஆங்கில, தமிழ் பாட்டுக்கு அவர்கள் போட்ட டான்ஸ் வீடியோக்களையும் என்னிடம் காண்பித்தார்.

அதன்பிறகு என் செல்போன் நம்பரை ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் சேர்த்துவிட்டார். அதில் ஏராளமான மாடலிங் பெண்கள் இருந்தனர்.

அவர்கள் எல்லோரும் வெளிப்படையாக சேட்டிங் செய்வார்கள். தனிப்பட்ட முறையில் என்னிடம் அவர் வாட்ஸ்அப்பில் சேட்டிங் மற்றும் வாட்ஸ்அப் காலில் பேசியிருக்கிறார்.

அவர், சில பெண்களுடன் நெருக்கமான வீடியோ வெளியான பிறகுதான் அவரின் இன்னொரு முகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers