திருமணமாகி குழந்தை உள்ள பெண்ணுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணமான பெண்ணுடன் இளைஞர் ஓட்டம் பிடித்த நிலையில் இளைஞரின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் கனகபுராவை சேர்ந்தவர் சித்தராஜூ (52). இவர் மனைவி சகம்மா (42). தம்பதிக்கு மனு (25) என்ற மகன் உள்ளார்.

மனுவுக்கு திருமணமாகாத நிலையில், ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

கள்ளத்தொடர்பானது வருடக்கணக்கில் தொடர்ந்த நிலையில் பெண்ணின் கணவன் மற்றும் குடும்பத்தார் மனுவை கண்டித்துள்ளார்.

ஆனால் இதையும் மீறி மனு தொடர்பை தொடர்ந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அந்த பெண்ணுடன் சேர்ந்து தலைமறைவாகியுள்ளார்.

இதையறிந்த ஓடிபோன பெண்ணின் குடும்பத்தார் மனுவின் பெற்றோரிடம் சண்டை போட்டதோடு அவர்களை தாக்கியுள்ளனர்.

மகன் செய்த செயலால் அவமானமான நிலைக்கு தள்ளப்பட்ட சித்தராஜூவும், சகம்மாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers