எலி போன்று மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்: இரண்டு முறை ஏற்பட்ட மாரடைப்பு.. பகீர் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் வறுமை காரணமாக மனிதர்களை வைத்து ஆய்வுசெய்யும் கும்பலிடம் சிக்கி, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (36).

குடும்பச் சூழ்நிலை காரணமாக ஸ்பானிஸ் என்னும் லேப்பில் சத்து மாத்திரை ஆய்வுப் பரிசோதனைக்குச் இவர் சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சென்றவுடன் முழு உடல் பரிசோதனை செய்துவிட்டு, மனித உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கான ஆய்வுசெய்யப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வுக்கு முன்பு, கிருஷ்ணமூர்த்தியின் உடல் மற்றும் இதயத்தை முழுமையாகப் பரிசோதனை செய்துள்ளனர். பின்னர், இவருக்கு கொழுப்புத் தன்மையை அதிகரிப்பதற்காக உணவு கொடுத்துள்ளனர்.

அதேபோல, கொழுப்பை அதிகரிக்கும் மருந்து மாத்திரைகளையும் கொடுத்துள்ளனர். இப்படி அதிகப்படியான கொழுப்பு கொடுத்ததால், கிருஷ்ணமூர்த்திக்கு இதயப் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அளவுக்குச் சென்றுவிட்டது.

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், என் குழந்தை மற்றும் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவச் செலவுக்கு நண்பர் சரவணனிடம் இரண்டாயிரம் ரூபாய் பணம் கேட்டிருந்தேன்.

ஆனால், சரவணனிடம் பணம் இல்லாததால், ‘சத்து மாத்திரை பரிசோதனை நிலையத்தில் ஆய்வுக்குச் சென்றால் பணம் கிடைக்கும் என்றார்.

இதனால், நான் அங்கு சென்றேன். அங்கு, கொழுப்பைக் குறைப்பதற்கான புதிய மருந்தாய்வுக்கு உட்படுத்த உள்ளோம், 3 நாள்கள் தங்கி ஆய்வுசெய்தால் எட்டாயிரம் ரூபாய் தருகிறோம். எந்த பக்க விளைவும் கிடையாது என கூறினர்.

ஆனால், அதிக கொழுப்பு ஏறி இதய பாதிப்புக்குள்ளான நான், எனது உடல் பாதிப்புக்கு தீர்வு கேட்டபோது, என் உடலில் ஏற்பட்ட பாதிப்புக்கும் ஆய்வு நிலையத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்ட நான் வழக்கறிஞர் மூலம் புகார் தெரிவித்துவிட்டேன். எனவே, காவல்துறை அதிகாரிகளும், மருத்துவ அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு தர வேண்டும் என்றார்.

இந்த மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers