ஒன்றரை வயது மகனை விஷம் கொடுத்து கொன்று விட்டு தூக்கில் தொங்கிய தந்தை: அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் சென்னையில் போதிய வருமானம் இல்லாததால் விரக்தியடைந்த நபர் தனது ஒன்றரை வயது மகனை விஷம் கொடுத்து கொன்று விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூரை அடுத்த பனையூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (30).

தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெயா (25). இவர்களது ஒன்றரை வயது மகன் கிஷோர்.

சுரேஷின் வருமானம் குறைவு என்பதால், குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.

குறைந்த சம்பளத்தில் அன்றாட வாழ்க்கை நடத்துவதே கஷ்டமாக இருக்கும் போது, குழந்தையை எப்படி படிக்க வைப்பது என்று மனைவியிடம் அடிக்கடி கூறி வருத்தப் பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை ஜெயா கண் விழித்துப் பார்த்த போது, வீட்டின் அறையில் சுரேஷ் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பாலில் விஷம் கலந்து கொடுத்து, கொல்லப்பட்ட நிலையில் அருகில் குழந்தை கிஷோர் சடலம் கிடந்தது. இதைப் பார்த்து ஜெயா கதறி அழுதார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். தகவல் அறிந்து கானாத்தூர் பொலிஸார் விரைந்து வந்தனர்.

2 பேரின் சடலங்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராயப் பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர்.

சுரேஷின் சட்டைப் பையில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில், எனக்கு போதிய வருமானம் இல்லாததால், மகனை கொன்று தற்கொலை செய்துகொள்கிறேன்.

என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என் அப்பா, அம்மாவிடம் யாரும் சண்டை போட வேண்டாம் என் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விஷம் கொடுத்து குழந்தையை கொன்றுவிட்டு, சுரேஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உண்மை தெரியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரின் இறப்பு குறித்து ஜெயாவிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers