துரோகத்தால் வீழ்ந்த தம்பதி: சாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய நெகிழ்ச்சி

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் உள்ள விடுதியில் தொழிலதிபர் ஒருவர் மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.

கடிதத்தில், வாங்கிய கடனுக்காக சொந்தமான இடத்தை உறவினர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்து பறித்துக்கொண்ட தகவல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொள்ள தொழிலதிபர் கிருஷ்ணவேல், அவரின் மனைவி உமா ஆகியோர் முடிவுசெய்துள்ளனர்.

அப்போது குழந்தைகளைச் சாகடிக்க அவர்களுக்கு மனமில்லை. இதனால் தற்கொலை செய்வதற்கு முன் அவர்கள், குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளனர்.

குழந்தைகள் மயங்கியபிறகு, இருவரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்துள்ளனர் என்ற தகவல் பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அப்பாவும் அம்மாவும் இப்படி பண்ணிவிட்டார்களே என்று இரண்டு பிள்ளைகளும் மருத்துவமனையில் கதறி அழுதுள்ளனர்.

தங்களுடைய அப்பா, அம்மாவின் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிசாரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்