ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் பாஜகவின் பரிதாப நிலை.. திடீர் அந்தர் பல்டி அடித்த நடிகர் ரஜினிகாந்த்?

Report Print Santhan in இந்தியா

ஐந்து மாநிலங்களிலிருந்து வரும் தேர்தல் முடிவுகள் பாஜகவின் பின்னடைவை காட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

90 இடங்களை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், 230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கும், 40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டசபைக்கும் நவம்பர் 28-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது.

119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கும், 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கும் கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் மீதமுள்ள 199 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

இந்த மாநில தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது.

ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருகிறது. தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் மற்றும் மிசோரமில் எம்.என்.எப் கட்சிகள் ஆட்சியமைக்க உள்ளன.

இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக தனது செல்வாக்கை இழந்து இருப்பதை நன்றாக காட்டுகிறது. இது பாஜக.வுக்கு பெரிய பின்னடைவு என்பதில் மாற்றம் இல்லை என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் 10 பேர் சேர்ந்து ஒருவரை அடித்தால் யார் பலசாலி என்ற கேள்விக்கு அவர் பாஜகவிற்கு சாதகமாக பதிலளித்தார்.

அதுமட்டுமின்றி பிரதமர் மோடி நாட்டின் முன்னேற்றத்துக்கு கடுமையாக முயற்சிப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த நிலையில், தற்போது இவர் இப்படி கூறியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers