சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த 18 வயது கல்லூரி மாணவி: வெளியான பரபரப்பு பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலையூர் பேராசிரியர்கள் காலனியில் வசிப்பவர் ஜெயராஜ். இவர் மகள் மஹிமா (18). தாம்பரத்தில் உள்ள பிரபல கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் முதலாமாண்டு படித்து வந்தார்.

மஹிமா நேற்று மாலை 5.30 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக சக மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு மஹாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாகக் கூறினார்கள்.

அவர் விளையாடும்போதே மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் மாணவிகள் அனைவரையும் விளையாட்டில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்துவதாகவும், சுகவீனமாக இருந்த மஹிமா கட்டாயமாக விளையாடியதே அவர் உயிரிழப்புக்குக் காரணம் என்றும் மாணவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டனர்.

பின்னர் பொலிசார் தலையிட்டு அவர்களை கலைந்துபோகச் செய்தார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers