ஹோட்டலில் உள்ளாடையோடு உட்கார வைத்து டார்ச்சர்! நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் வேதனை

Report Print Santhan in இந்தியா

பிரபல திரைப்பட நடிகரான பவர்ஸ்டார் என்னை ஹோட்டல் அறையில் உள்ளாடையோடு உட்கார வைத்து டார்ச்சர் செய்ததாக வேதனையுடன் கூறியுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த ஆலம் மற்றும் அவரின் கூட்டாளிகள், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை சென்னையிலிருந்து ஊட்டிக்குக் கடத்தி சென்றனர்.

அங்கு பவர் ஸ்டாரின் மனைவி ஜூலியின் பெயரில் உள்ள வீட்டை எழுதித்தரும்படி ஆலம் தரப்பினர் பவர் ஸ்டார் சீனிவாசனையும், மனைவி ஜூலியையும் மிரட்டியுள்ளனர்.

தொடர்ந்து 6 நாட்கள் சிறை வைத்திருந்த நிலையில், அவர்களிடமிருந்து தப்பிய ஸ்ரீனிவாசன் சென்னை கோயம்பேடு காவால்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பின் பொலிசார் குறித்த பகுதிக்கு சென்று, ஸ்ரீனிவாசனின் மனைவியை மீட்டு. அங்கிருந்த 7 பேரை கைது செய்தனர்.

பொலிசார் இது குறித்து அந்த 7 பேரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் இது குறித்து பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், 6 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவைச் சேர்ந்த ஆலம் என்பவரிடம் 1.25 கோடி ரூபாய் கடன் வாங்கினேன்.

அதில் 35 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டேன். மீதமிருக்கும் 90 லட்சம் ரூபாய் திருப்பி கொடுப்பதாக கூறினேன், அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த சமயத்தில் தான் பிரித்தி என்ற சினிமா பி.ஆர்.ஓ கடந்த 5-ஆம் திகதி என்னிடம் பேசினார். அவர் பட வாய்ப்பு இருப்பதாக கூறி கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு வரும் படி கூறினார்.

அங்கு நான் சென்ற போது, செல்வின் என்பவரின் தலையில் சிலர் இருந்தனர். அவர்கள் ஆலம் என்பவரிடம் வாங்கிய பணத்தை உடனடியாகக் கொடுக்கும்படி மிரட்டினர்.

என்னுடைய பேன்ட், சட்டை மற்றும் இரண்டு செல்போன்களைப் பறித்து உள்ளாடையுடன் உட்கார வைத்தனர். அப்போது அங்கிருந்த ஒருவர் என் மீது இரக்கப்பட்டு என்னுடைய உடைகளை எனக்குக் கொடுத்தார்.

சாப்பாடு கூட சரியாக தரவில்லை, 5-ஆம் திகதி என்னை கடத்திய அவர்கள் 6-ஆம் திகதி ஊட்டிக்கு அழைத்துச் சென்று ஆலமிடம் ஒப்படைத்தனர்.

6-ஆம் திகதி காலை தான் இட்லி மாலையில் இரண்டு சப்பாத்தி வாங்கிக் கொடுத்தனர். என்னை அடித்தனர் தப்பி சென்றால் சுட்டுவிடுவோம் என்று மிரட்டினர்.

அதன் பின் என் மனைவியையும் இங்கு வரவழைத்தனர். அவளையும் டார்ச்சர் செய்தனர். எங்களிடம் சில கையெழுத்து வாங்கினர்.8-ஆம் திகதி என் குழந்தைகள் மூலம் கடத்திய விவகாரம் மீடியாக்களுக்கு தெரிந்துவிட்டதால், அவர்களிடம் கெஞ்சிய பின்னரே என்னை விட்டனர்.

அப்போது கூட பொலிசுக்கு போனால் உன் குடும்பமே இருக்காது என்று மிரட்டினர். 10-ஆம் திகதி வந்தவுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்