மகளின் திருமணத்தில் நடனமாடி கிண்டலுக்கு ஆளான முகேஷ் அம்பானி

Report Print Kabilan in இந்தியா

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தனது மகள் இஷாவின் திருமண விழாவில் நடனமாடியதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், ஆனந்த் பிரமாலுக்கும் நாளைய தினம் திருமணம் நடைபெற உள்ளது. முன்னதாக, திருமண விழாவையொட்டி உதய்பூரில் சங்கீத் கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரபலங்கள் நடனமாடினர். அப்போது முகேஷ் அம்பானியும், தனது மனைவி நீதாவுடன் இணைந்து நடனமாடினார்.

அப்போது அவர் நீல நிற சூட் அணிந்திருந்தார். இந்நிலையில் அம்பானியின் நடன அசைவுகளை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

மிகப்பெரிய தொழிலதிபரான ஒருவருக்கு சரியாக நடனம் ஆட வரவில்லையே என்றவாறு பலர் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக, முகேஷ் ஜாக்சன் அம்பானி என முகேஷ் அம்பானி தனது பெயரை மாற்றிவிட்டதாக இயக்குநர் கரண் ஜோஹர் கிண்டல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers