கணவனை பிரிந்து வேறொரு ஆணுடன் வாழ்ந்து வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! வலை வீசி தேடும் பொலிசார்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் கணவனை பிரிந்து வேறொரு நபருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த பெண் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதால், பொலிசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிராவின் தேனே மாவட்டத்தின் டோம்பிவிலி மான்பாடாவை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. 26 வயதான இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இவர், அதன் பின் ஜிஜேந்திரா சக்பால் (30) என்பவரை திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் இருவருக்கும் அண்மையில் சண்டை உண்டானதால், ஜிஜேந்திரா சக்பால், அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனால் ஜெயஸ்ரீ அருகில் இருக்கும் மான்பாடா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பொலிசார் ஜிஜேந்திரா சக்பாலை எச்சரித்து அனுப்பினர்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இவர்கள் வசித்து வந்த வீட்டில் மிகவும் மோசமான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் பக்கத்து வீடில் இருப்பவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த பொலிசார் பூட்டிக் கிடந்த வீட்டின் கதவை உடைத்து திறந்து உள்ளே பார்த்த போது, ஜெயஸ்ரீ அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதைத் தொடர்ந்து பொலிசார் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் தலைமறைவாக இருக்கும் ஜிஜேந்திராவை தேடி வருகின்றனர்.

அவர் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers