பல கோடி செலவில் மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் அம்பானி! அவர் பார்த்திருக்கும் மாப்பிள்ளையின் பின்புலம் என்ன?

Report Print Santhan in இந்தியா

உலககோடிஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷாவின் திருமணம் வரும் 12-ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளது.

மகளின் திருமணத்தை இந்த உலகேம் திரும்பி பார்க்கும் வகையில் கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார். கடந்த 8 மற்றும் 9-ஆம் திகதி நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையதளங்களை ஆக்கிரமித்தன.

இப்படி பல கோடி செலவில் தன் மகள் இஷாவின் திருமணத்தை செய்யும் முகேஷ் அம்பானி, தன் மகளுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்த்திருப்பார், அவரின் பின்புலம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

இஷா பிரமால் குழுமத்தின் தலைவர் அஜய் - ஸ்வாதி தம்பதியின் மகன் ஆனந்த் பிரமாலை திருமணம் செய்யவுள்ளார்.

கடந்த ஆண்டு வரை யார் என்றே தெரியாமல் இருந்த அவரை பலரும் தற்போது கூகுளில் தேடி வருகின்றனர்.

ஆனந்த் பிரமால், பென்சில்வேனியா பல்கலையில் பொருளாதாரம் படித்துவிட்டு ஹார்வர்ட் பல்கலையில் எம்.பி ஏ முடித்துள்ளார். அதுமட்டுமின்றி, இஷா, ஸ்டேன்போர்ட் பல்கலையில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.

எம்.பி.ஏ படித்த பிறகு, பிரமால் குழுமத்தில் இயக்குநராக இருந்தார். அதன் பின் பிரமால் ஸ்வாஸ்த்யா என்கிற அறக்கட்டளையை ஆரம்பித்து, கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்கச்செய்தார்.

இந்த அமைப்பு மூலம் நாள் ஒன்றிற்கு சுமார் 40000 நோயாளிகள் பயன் அடைந்து வருகின்றனர். தேசிய கிராமப்புற சுகாதார அமைப்புடன் கைகோத்து, இந்த அமைப்பு செயல்படுகிறது. பிரமால், ரியாலிட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்திவருகிறார்.

ஆனந்த் பிரமால் குடும்பத்திற்கும், அம்பானி குடும்பத்திற்கும் 40 ஆண்டுகால நட்பு இருந்து வருகிறது. இரு குடும்பத்திற்கும் நெருக்கம் அதிகம், ஆனந்தும், இஷா சிறுவயது முதலே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

முதலில் பிரமால்தான் தன்னுடைய காதலை முதலில் கூறியுள்ளார். இவரின் காதலை இஷாவும் ஏற்றுக் கொண்டார். அதன் பின் இவர்களின் நிச்சயதார்த்தம் இத்தாலியில் உள்ள லேக் கோமோ நகரத்தில் நடைபெற்றது.

இவர்களின் காதல் குறித்து முகேஷ் அம்பானி, எங்கள் குடும்பத்தில் எல்லோருமே லேட்டா படுத்து லேட்டாவே எழும் வழக்கம் இஷாவும் அப்படித்தான் லேட்டாகவே எழுவாள்.

ஆனால் பிரமால் குடும்பத்தினர் அப்படியில்லை. அதிகாலையிலேயே எழும் பழக்கம் கொண்டவர்கள். ஆனந்த் பிரமாலை பின்பற்றி, இஷாவும் அதிகாலையிலேயே எழத் தொடங்கினாள். அப்படித்தான், இஷாவின் காதல் எங்களுக்குத் தெரியவந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers