கெளசல்யாவின் இரண்டாவது திருமணத்தை மட்டும் வசைபாடுவது ஏன்?

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழகத்தில் மறுமணம் செய்து கொள்வது புதிதல்ல என்றிருக்கையில் சமூக ஊடகங்களில் சிலர் கெளசல்யா திருமணத்தை மட்டும் வசைபாடுவது ஏன்? என்பது குறித்து பிபிசியில் மக்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு,

திருமதி கௌசல்யாவின் கணவர் சங்கர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்பதலாயே சாதி வெறியர்களால் கொலை செய்யப்பட்டதன் காரணமாக கைம்பெண் ஆனவர்.

மற்ற சாதாரண பெண்களைப்போல மூலையில் முடங்கிப்போய் அடங்காமல் இந்த சமுதாய அவலத்திற்கு எதிராக செயல்படும் முற்போக்கு சிந்தனையாளர்களுடன் கைகோர்த்து அந்த கொடுமைகளுக்கு எதிராக போராடி வருபவர்.

தன் கருத்தை ஒத்த ஒரு வாலிபனை எல்லோர் முன்னிலையிலும் மறுமணம் செய்து கொண்டதில் என்ன தவறு? என்று தேவி ராமசாமி கூறியுள்ளார்.

பெண்களை வெறும் உடமைகளாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு இந்த பெண் யாரென்றுகூட தெரியாது நேரில் பார்த்துகூட இருக்கமாட்டார்கள்.

பின் ஏன் இந்த வன்மம்? இது வெறும் ஜாதிவெறி மட்டுமல்ல ஆணாதிக்கமும் பெண்களை மனிதர்களாக நினைக்காது பொருள்களாக என்னும் மனப்பாங்கும் இணைத்த ஒரு உளவியல் இது என்கிறார் கோமான் முகம்மது.

உங்களில் எவர் ஒருவரால் சங்கரை திருப்பி அப்பெண்ணிடம் சேர்ப்பிக்க முடியுமோ அவர் மட்டும் கல்லெறியலாம்! வசைபாடலாம் திட்டலாம் ... இது திருமணம் என்பதைவிட பாதுகாப்புக்காகவே நடந்தது என்றே சொல்லலாம்" என்கிறார் அசோக் சுமன்.

நாகரீகம் அடைந்த சமுதாயமாக மாறுவதற்கு தமிழகம் இன்னும் மிக மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியி௫க்கிறது என்று மஹா நடராசன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்