இந்தியாவில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார்? 3 மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை! தொண்டர்கள் உற்சாகம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகின்றன.

5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மற்றும் சத்தீஸ்கரின் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர்.

5 மாநில தேர்தலின் முடிவுகள், அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பதன் முன்னோட்டமாகப் பார்க்கப்படுவதால் நாடு முடிவதும் இந்தத் தேர்தல் முடிவுகள் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 மாநில தேர்தல் முன்னணி நிலவரம்:

மத்தியப்பிரதேசம்:

மொத்த இடங்கள்: 230

ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 116

காங்கிரஸ் கூட்டணி: 104

பா.ஜ.க : 96

மற்றவை: 05

ராஜஸ்தான்:

மொத்த இடங்கள்: 199

ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 100

காங்கிரஸ் கூட்டணி: 101

பா.ஜ.க : 76

பி.எஸ்.பி : 03

மற்றவை: 13

சத்தீஸ்கர்:

மொத்த இடங்கள்: 90

ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 46

காங்கிரஸ்: 52

பா.ஜ.க : 26

பி.எஸ்.பி: 07

மற்றவை: 01

தெலங்கானா:

மொத்த இடங்கள்: 119

ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 60

டி.ஆர்.எஸ் : 83

காங்கிரஸ் கூட்டணி: 24

பா.ஜக: 06

மற்றவை: 06

மிசோரம்:

மொத்த இடங்கள்: 40

ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 21

எம்.என்.எஃப்: 25

என்.பி.பி: 00

காங்கிரஸ்: 09

பா.ஜ.க: 01

மற்றவை: 04

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்