கெளசல்யாவின் 2-வது திருமணத்தில் இதை எல்லாம் கவனீச்சிங்களா? வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஆணவப்படுகொலையால் கணவனை இழந்த கெளசல்யா தன்னுடைய இரண்டாவது திருமணத்தில் நகைகள் மற்றும் மேக்கப் இல்லாமல் சாதி மறுமணம் செய்து கொண்டது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக திருமணம் என்றால், பெண் நகை அணிவது வழக்கம். நகை, பட்டுப்புடவை, தாலி போன்றவைகள் இருந்தால் தான் திருமண வீடே களைகட்டும்.

ஆனால் கணவனை இழந்த கெளசல்யா இன்று கோவையில் சக்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தாலும், ஒரு சிலர் அவரை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தான் அவர்களின் திருமண புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் உலா வருகிறது.

அதில் திருமணத்திற்கு முக்கியமாக பெண்கள் அணியும் நகை இல்லை, தாலி இல்லை, பட்டுப்புடவை இல்லை, மேக்கப் இல்லை என்று கெளசல்யாவை பாராட்டி வருகின்றனர்.

மேலும் பெரியார் இயக்கத்தில் இருப்பவர்கள் தாலி கட்டிக்கொள்ளமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers