50 வயது அம்மாவை துடப்பத்தை வைத்து சரமாரியாக அடித்த 17 வயது சிறுவன்: வைரல் வீடியோவின் பின்னணி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் 50 வயது அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தைக் கொண்டு அடித்த வீடியோ இணையத்தில் வைரலானதால், அவர் பொலிசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரைச் சேர்ந்த 50 வயது தாய், தன் மகன் சரியாக படிக்கமாட்டிங்கிறான், இதனால் அவனுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்று பக்கத்து வீட்டார்களிடம் கூறியுள்ளார்.

இதனால் அந்த 17 வயது மகன் மிகுந்த வருத்தத்தில் இருந்தார். இதைத் தொடர்ந்து சமீபத்திலும் இது போன்று அருகிலிருப்பவர்களிடம் பேசியதால், ஆத்திரமடைந்த அந்த சிறுவன் ஒரு கட்டத்தில், வீட்டில் இருந்த துடப்பத்தை எடுத்து அவரை அடித்துள்ளார்.

தன்னை பற்றி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேச கூடாது என்று கூறியுள்ளான். நீ இதுபோன்று தொடர்ந்து பேசினால், நான் இதுபோன்று தொடர்ந்து அடிப்பேன் என மிரட்டியபடி அடித்து உள்ளான். இதனால் அவனது தாய் வலியால் அலறியுள்ளார்.

இதனை தடுக்க முற்பட்ட சகோதரியையும் சிறுவன் அமைதியாயிரு என தடுத்து உள்ளான். இவை அனைத்தும் சகோதரியால் வீடியோ பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து நீ காவல்நிலையத்தில் புகார் அளித்தாலும் பராவாயில்லை என்று கூறியுள்ளான். அதன் பின் அந்த வீடியோ வைரலானதால், பொலிசார் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

மைனர் சிறுவன் என்பதனால் எச்சரிக்கை செய்துள்ளனர். போலீசார் முன் தனது தாயிடம் சிறுவன் மன்னிப்பு கேட்டுள்ளான். வருங்காலத்தில் திரும்பவும் இதுபோன்று செய்வதில்லை என பொலிசாரிடம் உறுதி அளித்தான்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...