அம்பானி வீட்டு திருமணத்திற்காக உதய்பூர் வந்த ஹிலாரி கிளிண்டன்!

Report Print Kabilan in இந்தியா

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக, அமெரிக்காவின் முன்னாள் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் உதய்பூருக்கு வருகை தந்துள்ளார்.

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷாவின் திருமணம், வரும் 12ஆம் திகதி உதய்பூரில் பிரம்மாண்டான முறையில் நடைபெற உள்ளது.

திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில், முகேஷ் அம்பானி குடும்பத்தினர் உதய்பூரில் பொதுமக்கள் சுமார் 5,100 பேருக்கு அன்னதானம் அளிக்கின்றனர். நேற்று தொடங்கிய இந்த அன்னதான திட்டம் 10ஆம் திகதி வரை நடைபெறும்.

இந்நிலையில், இஷா அம்பானியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக பிரபலங்கள் பலர் முன்னதாகவே உதய்பூரின் விமான நிலையத்திற்கு வந்திறங்கியுள்ளனர்.

குறிப்பாக, உதய்பூருக்கு அமெரிக்காவின் முன்னாள் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் வந்துள்ளார். அவரை வரவேற்ற முகேஷ் அம்பானி-நீதா அம்பானி தம்பதியினர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் ஜோடி, நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் சல்மான் கான், டோனி மனைவி சாக்‌ஷி, பரினீதி சோப்ரா, நடிகை வித்யா பாலன், நடிகர் ஜான் ஆபிரகாம், அனில் கபூர் ஆகியோர் உதய்பூர் விமான நிலையத்திற்கு வந்து இறங்கினர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. முன்னதாக பிரியங்கா சோப்ராவின் திருமணத்தில் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers