கர்ப்பிணி மனைவி கண்முன்னே மூக்கில் ரத்தம் வழிய துடிதுடிக்க இறந்த கணவன்: கதறும் குடும்பம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் கர்ப்பிணி மனைவியின் கண் எதிரே 23 வயது இளைஞன் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.பேட்டை அடுத்த ஆதிவரராகபுரம் பகுதியை சேர்ந்தவர் 23 வயது கவியரசன், இவரது மனைவி கோகிலா.

டிசம்பர் 6 ஆம் திகதி காலை சுமார் 10 மணியளவில் தனது மனைவி கோகிலாவை மாதந்திர பரிசோதனைக்காக வேலூர் மாவட்டம் சோளிங்கரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவமனையில் மருத்துவரை காண காத்திருந்தபோது தனக்கும் உடல்நிலை சரியில்லை என்பதால் சளி, இருமல், தொண்டைவலி என்று மருத்துவரிடம் காட்டியுள்ளார்.

கவியரசனை பரிசோதித்த மருத்துவர், ஊசி மருந்து ஒன்றை போட்டுள்ளார். ஊசி போட்ட சற்று நேரத்தில் கவியரசனுக்கு வாயில் நுரைத்தள்ளி, மூக்கில் ரத்தம் வந்துள்ளது.

உடனே அங்கிருந்து சோளிங்கர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் உடனடியாக வேலூரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அங்கும் பரிசோதித்த மருத்துவர்கள் இங்கு முடியாது என்று சொல்லி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பபட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சுமார் 5.30 மணியளவில் கவியரசன் இறந்துவிட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உடல் ஆய்கூறுக்கு அனுப்பப்பட்டு டிசம்பர் 7 ந்தேதி மாலை 2.30 மணியளவில் ஆம்புலனஸ் மூலம் சடலத்தை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதனிடையே கவியரசின் உறவினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தவறாக சிகிச்சை அளித்த சோளிங்கர் தனியார் மருத்துவமனையை மூடக் கூறியும்,

அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்தால் மட்டுமே சடலத்தை பெறுவோம் என்று சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

இதனால் சுமார் இரண்டு மணிநேரமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த ஆர்.கே.பேட்டை காவல் துறையினர் சம்பவயிடத்துக்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர்.

அதன்பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர். கவியரசன் இறந்ததன் காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்