தமிழகத்திற்கு வந்த இளம் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல்! அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் வடமாநில பெண்ணை ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் இதே போன்று பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு, தமிழகத்தின் கும்பகோணத்தில் இருக்கும் தனியார் வங்கி ஒன்றில் வேலை கிடைத்துள்ளது.

இதனால் அவர் வேலையில் சேர்வதற்காக கடந்த சனிக்கிழமை தமிழகம் வந்துள்ளார். இரயிலில் வந்த இவர் அன்று நள்ளிரவு இரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.

அதன் பின் தான் தங்கும் பகுதிக்கு செல்ல அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் வாடகைக்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டோவை ஓட்டிய ஆட்டோ ஓட்டுனர் அவர் சொன்ன பகுதிக்கு அழைத்துச் செல்லாமல் தவறான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதை அறிந்த அந்த பெண் உடனடியாக தன்னுடைய நண்பர்களுக்கு இதைப் பற்றி தகவல் தெரிவிக்க, உடனடியாக ஆட்டோ ஓட்டுனர், அவரை ஒரு இருட்டு பகுதியில் இறக்கிவிட்டு வேகமாக சென்றுள்ளார்.

நடுஇரவில் அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இடத்தில் பதற்றமாக நின்று கொண்டிருந்த போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவரை வலுக்கட்டாயமாக இருட்டு அதிகமாக இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அந்த இரண்டு பேர் மட்டுமின்றி மேலும் இரண்டு பேர் என மொத்தம் 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் ஆடைகளை அகற்றி ஆபாசமாக வீடியோ எடுத்த அவர்கள், வெளியே சொன்னால் வாட்ஸ் அப்பில் ஆபாசக்காட்சிகளை வெளியிட்டு விடுவோம் எனக் கூறி மிரட்டிள்ளனர்.

இதனையடுத்து ஆட்டோவை பிடித்து அந்த பெண்ணை வழியனுப்பி வைத்துள்ளனர்.

அந்த நேரத்தில் அப்பெண்ணோடு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஒரு இளைஞரும் ஆட்டோவில் சென்றுள்ளார். இருப்பினும் அந்த பெண் ஆட்டோவின் எண்ணை மனதில் வைத்துக் கொண்டு, நடந்தவற்றை தன் பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் கூறியுள்ளார்.

அதன் பின் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த ஆட்டோ எண்ணை வைத்து பொலிசார் அவரை தேடி பிடித்தனர்.

அந்த நபர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது கும்பகோணத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் எனவும், அவர்களின் பெயர் தினேஷ், வசந்த், புருஷோத், அன்பரசன் என தெரிவிக்க பொலிசார் அந்த நபர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதில் சில அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நான்கு பேரும், ஆட்டோவில் தனியாக வரும் பெண்களை அழைத்துச்சென்று கூட்டு வன்கொடுமை செய்து, அதன் பின் அவர்களை ஆபாசமாக வீடியோ படம் எடுத்து, வெளியே சொன்னால் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியதும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...