கணவனை இழந்து தனியாக வசித்த இளம் விதவை பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கணவனை இழந்த இளம் விதவை பெண் மர்ம நபரால் ரூ.95,000 ரூபாய் ஏமாந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்தவர் அனிதா தேவி (28). இவரின் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் இறந்த நிலையில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அனிதாவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தன் பெயர் ஷகீல் அகமது என கூறியுள்ளார்.

பேடி-எம் மாலில் அனிதா வாங்கிய பொருளுக்கு அதிர்ஷ்ட பரிசாக ரூ 16 லட்சம் விழுந்துள்ளதாக கூறியுள்ளார்.

இதற்கேற்றார் போல் அனிதா கடந்த வாரம் பேடி-எம் மால் மூலம் பொருள் வாங்கியதால் இதை உண்மை என நம்பினார்.

இதையடுத்து அனிதாவின் வங்கி கணக்கு எண்ணை அனுப்ப சொன்ன அகமது, டோக்கன் தொகையாக குறிப்பிட்ட தொகையை செலுத்த சொல்லியுள்ளார்.

இதையெல்லாம் நம்பிய அனிதா அகமதின் வங்கி எண்ணை வாங்கி கொண்டு அதில் ரூ.95,400-ஐ உறவினர்களிடம் கடன் வாங்கி செலுத்தியுள்ளார்.

அதற்கு பிறகே தான் ஏமாற்றப்பட்டதை அனிதா உணர்ந்தார். இதையடுத்து அவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில், கணவர் இல்லாமல் தனியாக வாழும் என்னை மர்ம நபர் ஏமாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து சைபர் கிரைம் பொலிசார் உதவியுடன் பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers