காயத்ரி ரகுராம் பகிர்ந்த புகைப்படம் என்னை வருத்தப்பட வைத்தது: தமிழிசை

Report Print Deepthi Deepthi in இந்தியா

பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், நடன இயக்குநர் காயத்ரி ரகுராமுக்கும் தொடர்ந்து வார்த்தை போர் நடந்து வருகிறது.

கடந்த வாரம் குடிபோதையில வாகனம் ஓட்டியதாக நடிகை காயத்ரி பொலிசில் சிக்கினார்.

`நான் அன்று இரவு ஆல்கஹால் குடிக்கவில்லை. ஜலதோஷம் பிடித்ததால் சிரப் குடித்தேன். அதனால் ஆல்கஹால் சோதனையில் பாசிடிவ் வந்திருக்கலாம். என்னைப் பற்றி அவதூறு செய்தி பரப்படுகிறது. பா.ஜ.க-வில் என் வளர்ச்சி பிடிக்காத சிலர் இப்படிச் செய்கிறார்கள்’ என்று விளக்கம் கொடுத்தார் காயத்ரி.

ஆனால், காயத்ரி ரகுராம் கட்சியில் இல்லை என்றும் பாஜக தலைவர் தமிழிசை விளக்கம் அளித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காயத்ரி, `தமிழிசை மேடம் நான் பாரதிய ஜனதாவின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது ஒரு கணினி மூலமாக. நீங்களாக யாரையும் கட்சியில் சேர்க்கவோ நீக்கவோ முடியாது. இது ஒரு தேசியக் கட்சி. உங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்று ட்வீட் தட்டினார்.

போதாதென்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் `தமிழிசையை பா.ஜ.க தலைவர் பதவியில் இருந்து நீக்கினால்தான் கட்சி முன்னேறும்’ என்று கருத்து தெரிவித்தார்

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த தமிழிசை, காயத்ரி ரகுராம் சொல்லி தலைவர மாத்துற அளவுக்கு பா.ஜ.க இல்லை. இவங்களால வர்ற சலசலப்பு எல்லாம் நான் கண்டுக்க மாட்டேன். பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் என்ன பத்தி தெரியும்.

காயத்ரி அவங்க அப்பா படத்தை போட்டு, `மிஸ் யூ பா’ ந்னு எழுதியிருந்தாங்க. அது என்ன ரொம்ப வருத்தப்பட வச்சது. நான் எப்பவுமே மனிதாபிமானம் உள்ள மருத்துவரா தான் வாழ்ந்துட்டு இருக்கேன்.

என்னை திட்டியிருந்த ட்வீட் எதுவுமே என் கண்ணுல படல. எனக்கு என்ன தோணுச்சு தெரியுமா.

ஒரு தந்தை இழந்த பெண், ஏதோ மன வேதனையில் பேசுறாங்க. அவங்க மன அழுத்தத்தில் இருங்காங்கன்னு தோணுச்சு. அதோட அவங்க என்ன திட்டினது பத்தியெல்லாம் நான் பெருசா எடுத்துக்கல.

அவங்க சமீபத்துல பொலிசில் பிடிபட்டது பத்திக்கூட எனக்குத் தெரியாது. அவங்களுக்கு இப்பவும் உதவி பண்ண நான் ரெடியாதான் இருக்கேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers