இன்ஹேலரில் ஆல்கஹால் போதை: நடிகை காயத்ரி ரகுராம் சொல்வது உண்மையா? வெளியான தகவல்

Report Print Raju Raju in இந்தியா

இன்ஹேலரில் ஆல்கஹால் போதை இல்லை எனவும் வாகன சோதனையின் போது குடித்திருந்ததாக காட்டாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகை காயத்ரி ரகுராம் கடந்த வாரம் குடிபோதையில் கார் ஓட்டி வந்ததாக போக்குவரத்து பொலிசார் அவருக்கு அபராதம் விதித்தனர். இது குறித்து காயத்ரி ரகுராம் அளித்த பேட்டியில், எனக்கு இருக்கும் வீஸிங் பிரச்சனைக்காக இன்ஹேலர் அடித்திருந்தேன். இன்ஹேலரில் ஆல்கஹால் இருக்கிறது.

அதனால், பொலிசாரின் வாகன சோதனையில் நான் குடித்திருந்ததாக காட்டியிருக்கிறது.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ரத்தப் பரிசோதனை எடுத்துப் பாருங்கள் என நான் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

காயத்ரி ரகுராமின் விளக்கம் இன்ஹேலர் பயன்படுத்துபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்ஹேலர் எடுத்திருக்கும் நிலையில், வாகன சோதனையின்போது மது குடித்திருப்பதாக காட்டிவிடுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடம் பரவியது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், மூச்சிறைப்பு நோய் (வீஸிங்) பிரச்சினை இருப்பவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை விட இன்ஹேலர் சிறந்தது.

இது நேரடியாக நிவாரணம் அளிக்கும். இதில் ஆல்கஹால் இல்லை.

இன்ஹேலர் பயன்படுத்தியவர்களை மது குடித்திருப்பதாக பொலிசாரின் பரிசோதனைக் கருவி காட்டாது.

ரத்தப் பரிசோதனை செய்தாலும் குடித்திருப்பதாக முடிவுகள் வராது. எனவே இன்ஹேலர் பயன்படுத்துபவர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers