சாக்கடையில் உயிரோடு கிடந்த 5 மாத குழந்தை கரு: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

கோவையில் ஐந்து மாதங்களே ஆன குழந்தை கரு ஒன்று சாக்கடையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள சாக்கடையில், முழுவதும் வளர்ச்சிப் பெறாத குழந்தை கரு ஒன்று தொப்புள்கொடியுடன் கிடந்துள்ளது.

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொலிசுக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த பொலிசார் அந்த கருவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கருவை பரிசோதித்த மருத்துவர்கள், அது உருவாகி ஐந்து மாதம் ஆகியிருக்கலாம் என்று தெரிவித்தனர்.

சாக்கடை நீரை குழந்தை வரு குடித்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சில மணி நேரங்களில் உயிரிழந்துவிட்டது.

சாக்கடையில் அந்த கருவை வீசியது யார் என்பது குறித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கமெரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers