துரோகம் செய்த மனைவியின் ரகசியத்தை கண்டுபிடிக்க வெளிநாட்டிலிருந்து வந்த கணவன்: கடைசியில் நடந்த சோக சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மனைவியின் தவறான நடத்தையை கண்டுபிடிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த கணவன் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் - சபீனா பானு ஆகிய இருவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது.

வேலை பார்ப்பதற்காக ஜாகீர் உசேன் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் சபீனா பானுவுக்கும், பக்கத்துவீட்டை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்த விவகாரம் அருகில் வசிப்பவர்களின் வீட்டிற்கு தெரியவந்து, கடைசியாக வெளிநாட்டில் இருடக்கும் கணவருக்கு தகவல் சென்றுள்ளது.

இதனால், தனக்கு துரோகம் செய்த மனைவியின் ரகசியத்தை கண்டுபிடிப்பதற்காக 6 மாதத்திற்கு முன்னால் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளார்.

இவர் வந்த நாட்களில் இருந்து கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த பிரச்சனையின் உச்சகட்டமாக கடந்த மாதம் 28 ஆம் திகதி தனது கணவனின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்தார் மனைவி பானு.

உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தநிலையில் ஜாகீர் உசேன் வீட்டுக்குள் அலறித் துடித்தார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் சபீனா பானு, அவரது கள்ளக்காதலன் யுவராஜ் ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers