கணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு..அந்த தொழிலில் தள்ளப்பார்க்கிறான்! பொலிசாரிடம் கண்ணீர்விட்ட மனைவி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் பெண், தன்னுடைய கணவன் என்னை விபச்சாரத்தில் தள்ளப்பார்ப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்து, திடீரென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

சென்னை வேலூர் கஸ்பா பையர்லைன் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரும் அரக்கோணம் இச்சிப்புதூரை சேர்ந்த சசிகலா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் செய்த சில மாதங்களிலே சசிகலா தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன் பின் அவர் கணவர் தன்னை விபச்சாரத்தில் தள்ளப்பார்ப்பதாக வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் புகார் அளித்தார்.

ஆனால் அது குறித்து பொலிசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று மீண்டும் குறித்த காவல்நிலையத்திற்கு வந்த கமலா, கணவரை கைது செய்யும் படி கண்ணீர்விட்டதுடன், திடீரென்று தான் கொண்டுவந்திருந்த பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைக் கண்ட அங்கிருந்த பொலிசார் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா கொடுத்துள்ள புகாரில், இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு தான் கணவர் குமாருக்கு குடிப்பழக்கம், சில பெண்களுடன் தொடர்பிருப்பது எனக்குத் தெரியும்.

எங்களுக்கு குழந்தை இருக்கிறது. என்னுடைய அப்பா, அம்மாவின் ஆதரவு எனக்கு இல்லை. இதனால் குமாருடன் அனுசரித்து வாழ்ந்தேன்.

நான் 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, வேலூரில் நாங்கள் வசித்த பகுதியில் ஒரு இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து எனது கணவர் பலாத்காரம் செய்துவிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் மதுபோதையில் வந்த இவர், தன்னை அடித்து உதைத்து வீட்டிற்கு வெளியே தள்ளிவிட்டார்.

இதன் காரணமாக நான் என் அம்மாவின் வீட்டிற்கு சென்றுவிட்டேன். என்னுடைய மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார்.

அதுமட்டுமின்றி விபச்சாரத்தில் தள்ளப்பார்க்கிறார். நண்பர்களுக்கு என்னை விருந்தாக்குவேன் என்று பயமுறுத்துகிறார். என் மரணத்திற்கு என் கணவர் குமார், அவரின் அம்மா சிட்டியாம்மா மற்றும் தம்பி வினோத் தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers