தாய்மாமன் மகனின் மனைவியை காதல் வலையில் வீழ்த்திய பிரேம்! அதன் பின் நடந்த விபரீத சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் தம்பதி மீனாட்சி சுந்தரம்- அமுதா.

இவர்களுக்கு பிரேம்குமார்(28) என்ற மகன் உள்ளார். லேத் பட்டறை நடத்தி வரும் இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு பின்னர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியுள்ளார்.

இந்நிலையில் பிரேம்குமாரின் வீட்டில் தாய்மாமன் மகன் பிரகாஷ்(34) தன் மனைவி சூர்யாவுடன் வசித்து வந்துள்ளார். அப்போது பிரேம்குமாருக்கும், சூர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளைடைவில் அவர்கள் நெருங்கி பழகும் அளவிற்கு வந்துள்ளது. இதனால் இவர்கள் பல முறை தனியாக உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் இரண்டு பேரின் குடும்பத்தாருக்கும் தெரியவந்ததால், அவர்கள் கண்டித்துள்ளனர்.

பிரகாஷ் 3 மாதத்திற்கு முன்பு மனைவியுடன் அங்கிருந்து வெளியேறி அருகிலிருக்கும் கருப்பாயூரணி உருக்கு சென்று விட்டார். ஆனால் அதன் பிறகும் சூர்யாவுடன் பிரேம்குமார் தொடர்பு வைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் இன்று சகோதரர் பாலனுடன் பிரேம்குமார் இருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், இரண்டு பேரும் அவரை சரமாரியாக வெட்டியதால், அவர் படுக்கையிலே பரிதாபமாக பலியாகினார்.

மகனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அமுதாவை ஒரு அறையில் தள்ளி அடைத்து விட்டு பிரகாசும், அவரது சகோதரரும் தப்பிச் சென்று விட்டனர்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், விரைந்து வந்த பொலிசார் பிரேம் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தப்பி ஓடிய பிரகாஷ் மற்றும் அவரது சகோதரரை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers