அந்த அங்கிளை எனக்கு தெரியும்.... பேத்தி வயது சிறுமியை சீரழித்த பொலிசின் உண்மை முகம் அம்பலம்: அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னை வில்லிவாக்கத்தில் பேத்தி வயதான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸ் சிக்கியது மற்றும் நடந்த சம்பவம் குறித்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

சில தினங்களுக்கு முன்னர் சம்பவம் நடைபெற்ற அன்று இரவு நேரத்தில் வில்லிவாக்கம் பகுதியில் பைக்கில் சென்ற பொலிஸ் வாசுவை விரட்டி சென்ற அப்பகுதி மக்கள் தர்மஅடி கொடுத்தனர்.

இதனையடுத்து வாசு மீட்கப்பட்டு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். ஆனால், வாசு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. யாரும் புகார் கொடுக்கவில்லை என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸ் காப்பாற்றப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

இதனைத்தொடர்ந்து, ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரின் கவனத்துக்கு இந்த சம்பவம் கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர், தவறு செய்தது யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதோடு வாசு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

விசாரணையில் அந்தச் சிறுமி, `அந்த அங்கிளை (வாசு) எனக்குத் தெரியும். நாங்கள் குடியிருக்கும் பகுதியில்தான் அவர் குடியிருந்தார். அன்பாகத்தான் என்னிடம் பழகினார். அதன்பிறகு அவரின் ஒவ்வொரு செயல்களும் பேச்சும் அநாகரிகமாக இருந்தது.

எனக்கு அப்பா இல்லை. அதனால் அம்மாதான் என்னை கஷ்டப்பட்டு வளர்த்துவந்தார். அங்கிள் குறித்து யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தேன்.

சம்பவத்தன்று என்னுடைய அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு வந்துவிட்டனர். அப்போது அங்கிளும் அங்கு இருந்து பைக்கில் சென்றுவிட்டார் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை அடிப்படையாக வைத்து, பொலிஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து வில்லிவாக்கம் மகளிர் பொலிசார், வாசு மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வாசுவின் இந்த செயல் பொலிஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி பேரன் பேத்திகளும் உள்ள இவர், இன்னும் சில மாதங்களில் பணி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers