கஜா புயல் பாதிப்புக்கு நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சம் தரவில்லையாம்: வெளியான பரபரப்பு தகவல்

Report Print Raju Raju in இந்தியா

கஜா புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு நடிகர் அஜித்குமார் 15 லட்சம் வழங்கியதாக தெரியவந்த நிலையில் அவர் ரூ 5 கோடி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் நடிகர்கள் பலர் நிதியுதவி வழங்கினார்.

நிதி வழங்கியவர்கள் பட்டியலை அரசு வெளியிட்டபோது அதில் நடிகர் அஜித்குமார் 15 லட்சம் வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

கொடுத்த நிதியை கூட ஊடகங்களுக்கு தெரிவிக்காமல் கொடுத்த அஜித்தை பலரும் பாராட்டினார்கள்,

இந்நிலையில், சேலத்தை சேர்ந்த விநியோகஸ்தர் 7ஜி சிவா அஜித்குமார், கஜா புயலுக்கு நிவாரண நிதியாக 15 லட்சம் மட்டும் கொடுக்கவில்லை 5 கோடி கொடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். சேலத்தை சேர்ந்த சினிமா விநியோகஸ்தரான சிவா, ரஜினி 2.0 படத்தின் சேலம் உரிமத்தை வாங்கியுள்ளார்.

அஜித்தின் விஸ்வாசம் படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதனால் எந்த விதமான கொண்டாட்டங்களுடன் விஸ்வாசத்தை வெளியிடலாம் என்று அஜித் ரசிகர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

அதில் கலந்துகொண்டு பேசிய 7ஜி சிவா, கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அஜித் 15 லட்சம் கொடுத்தார் என்று சொல்வார்கள். ஆனால், அவர் 5 கோடி வரை கொடுத்திருக்கிறார். தான் செய்த உதவிகளை வெளியே சொல்லாமல் இருப்பதுதான் அவருடைய கேரக்டர்.

அவருடன் பெர்சனலாகப் பேசியிருக்கிறேன், பழகியிருக்கிறேன் என்பதால் எனக்குத் தெரியும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers