ஆசை காதலனுக்கு பதிலாக வேறு பெயர்! மணமகனுக்கு ஷாக் கொடுத்த மணமகள்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமண கோலத்தில் இருந்த மணப்பெண் தனது கையில் உள்ள மருதாணியில் கணவரின் பெயருக்கு பதிலாக எழுதியுள்ள பெயர்கள் சுவாரசிய பின்னணியை கொண்டுள்ளது.

சென்னையை சேர்ந்தவர் தீப்தி மங்கோட்டில். இவருக்கும் பிரவீன் பாலசந்தர் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது தீப்தி கை முழுவதும் மருதாணி வைக்கப்பட்டது.

பொதுவாக மருதாணிக்கு நடுவில் மணமகனின் பெயர் சிறிய அளவில் எழுதப்பட்டிருக்கும். தனது பெயர் எங்குள்ளது என்பதை மணமகன் கண்டுப்பிடிக்க வேண்டும்.

ஆனால் தீப்தியோ தனது ஒரு கையில் உள்ள மருதாணியில் Memes எனவும் இன்னொரு கையில் உள்ள மருதாணியில் Bacon எனவும் எழுதியிருந்தார்.

இந்த வார்த்தைகளை தீப்தி எழுதியதன் பின்னணியில் சுவாரசிய காரணம் உள்ளது.

அதாவது சமூகவலைதளத்தில் தீப்திக்கும், பிரவீனுக்கும் பொதுவான நண்பர் ஒருவர் அடிக்கடி விதவிதமான மீம்ஸ்களை போட்டு அதில் தீப்தி மற்றும் பிரவீன் ஐடிக்களை டேக் செய்துள்ளார்.

இதன் மூலம் தான் தீப்தியும், பிரவீனும் நட்பாகி பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

இருவரும் காதலர்கள் ஆன பின்னர் Bacon எனப்படும் மாமிச உணவுகளை விரும்பி சாப்பிட தொடங்கினர்.

இதையடுத்து தா தனது கையில் Memes மற்றும் Bacon என தீப்தி எழுதி திருமண நிகழ்வில் புதிய சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers