சின்மயியியை சும்மாவிடமாட்டேன்.. ஆதாரங்களை வெளியிடுவேன்: நடிகர் ராதாரவி ஆவேசம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

வைரமுத்துவை தொடர்ந்து பின்னணி பாடகி சின்மயியிக்கும், நடிகர் ராதாரவிக்கும் இடையேயான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

டப்பிங் யூனியனியில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்தும் அதன் தலைவரான ராதாரவி தன்னை மிரட்டியதாகவும் சின்மயி புகார் கூறினார்.

மேலும், ராதாரவி தனது பெயருக்கு முன்னால் ‘டத்தோ’ என்ற பட்டத்தை போடுவார். இது மலேசியாவில் வழங்கப்படும் கவுரவ பட்டம். அவருக்கு அப்படி ஒரு பட்டமே வழங்கப்படவில்லை என்று கூறி அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டார்.

இந்நிலையில், சின்மயியின் இந்த செயல் குறித்து நடிகர் ராதாரவி கூறியதாவது, வைரமுத்துவை பிளாக் மெயில் பண்ண பார்த்தார். முடியவில்லை. இப்போது என்னிடம் வந்து இருக்கிறார். மலேசியாவில் டத்தோ பட்டம் யார் யார் வழங்குகிறார்கள் என்ற விவரம் கூட தெரியாமல் இருக்கிறார்.

நான் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. விரைவில் ஆதாரங்களை வெளியிடுவேன். சின்மயி வெளியிட்டு இருக்கும் கடிதமே போலியாக இருக்கும் என்று சந்தேகிக்கிறேன். சின்மயியை சும்மா விடப்போவதில்லை. எனக்கு பட்டம் தந்தவர்களே அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers