தனக்கான ராயல்டி பணத்தை இளையராஜா என்ன செய்தார் தெரியுமா?

Report Print Arbin Arbin in இந்தியா

தன்னுடைய பாடல்களை பாடுவதற்கு ராயல்டி கோரியுள்ள இசைஞானி இளையராஜா, அந்த தொகையை நலிந்த இசை கலைஞர்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா தாம் இசையமைத்த பாடல்களை பாடுவதற்கு ராயல்டி கட்டணம் கோரியதுடன், அது எவ்வளவு என்பது குறித்தும் விளக்கமான பட்டியல் வெளியானது.

வெளிநாட்டு கச்சேரிகளில் இளையராஜா பாடல்களை பாட, அதாவது எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிகரன், சங்கர் மகாதேவன், சித்ரா உள்ளிட்ட ‘ஏ’ பிரிவினருக்கு வருடத்துக்கு ரூ.20 லட்சம் கட்டணமும் ‘பி’ பிரிவினருக்கு ரூ.15 லட்சமும் ‘சி’ பிரிவினருக்கு ரூ.10 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோயில்கள், திருமண விழாக்கள், தொண்டு நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு ராயல்டி வசூலிக்கப்படுவதில்லை.

ராயல்டியை வசூல் செய்யும் உரிமையை இசைக்கலைஞர்கள் சங்கத்துக்கு இளையராஜா வழங்கி உள்ளார்.

இந்த நிலையில் தமது பாடல்களுக்கான காப்புரிமை தொகையை நலிந்த இசை கலைஞர்கள் பெற்றுக்கொள்ள இசையமைப்பாளர் இளையராஜா பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.

திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம், அந்த பத்திரத்தையும் இளையராஜா ஒப்படைத்துவிட்டார்.

ராயல்டி தொகை, கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கு பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers