வழக்கறிஞர்களால் சீரழிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவியின் ஆடியோ வெளியீடு

Report Print Vijay Amburore in இந்தியா

பெங்களூரில் வழக்கறிஞர்கள் இரண்டு பேரால் சீரழிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவியின் ஆடியோ வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தமான், நிகோபாரை சேர்ந்த 26 புஷ்பா அர்ச்சனா என்ற இளம்பெண், பெங்களூரில் மல்லேஸ்வரம் பகுதியில் விடுதி எடுத்து தங்கி தன்னுடைய வழக்கறிஞர் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

இவர் கடந்த 20ம் தேதியன்று, பொலிஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார்.

அந்த புகாரில், மூத்த வழக்கறிஞர்கள் சந்திர நாக் டி மற்றும் சேதன் தேசாய், ஆகியோர் தன்னை கேளிக்கை விடுதிக்கு அழைத்துச்சென்று மது கொடுத்து துஸ்ப்பிரயோகம் செய்ததாக தெரிவித்திருந்தார்.

புகார் கொடுக்கப்பட்ட அடுத்த இரு நாட்களிலே குற்றம்சுமத்தப்பட்ட இரண்டு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றிருந்தனர்.

புஷ்பா கொடுத்திருக்கும் புகார் பற்றி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக வழக்கறிஞர்கள் இருவரும், புஷ்பாவின் தந்தை மற்றும் சகோதரனை 24-ம் தேதியன்று பெங்களூருக்கு வருமாறு கூறியுள்ளனர். அதன் படி இருவரும் பெங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளனர்.

பின்னர் பேச்சு வார்த்தை முடிந்ததும், புஷ்பா தன்னுடைய விடுதி அறைக்கு சென்றுள்ளார். அடுத்த நாள் காலையில் போன் செய்தபோது நீண்ட நேரம் போன் எடுக்காமல் இறந்ததால், சந்தேகத்தின் பேரில் அறைக்குள்ளே சென்று பார்க்கும்போது புஷ்பா இறந்த நிலையில் கிடந்தார்.

இந்த விவகாரம் பெங்களூரு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், புஷ்பா செல்போன் மற்றும் அவருடைய உடமைகளை கைப்பற்றிய பொலிஸார் தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில், வழக்கை வாபஸ் பெறுமாறு சிலர் மிரட்டல் விடும் ஆடியோ ஒன்று செல்போனில் பதிவாகியிருந்தது.

இந்த மன அதிர்ச்சியின் காரணத்தால் என்னால் எதையும் செய்ய முடியவில்லை. அவர்கள் என்ன செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியாது. நான் அழுத்தத்திற்கு உள்ளானேன், நான் பயந்தேன்.

யாரோ நான் மூச்சு விடுவதை கட்டுப்படுத்துவது போல இருந்தது என அந்த ஆடியோவில் புஷ்பா பேசியிருந்தார். தற்போது அந்த ஆடியோ இணையதளம் முழுவதும் வைரலாக பரவியதை அடுத்து, இரு வழக்கறிஞர்கள் மீதும் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்..

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...