சென்னையில் விமானநிலையத்தில் திருதிருவென முழித்த இலங்கையர்: விசாரித்த அதிகாரிகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் இருந்து இலங்கைக்கு கிளம்பவிருந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த இலங்கையர் ரூ.15 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டொலர்களை கடத்திய நிலையில் பிடிப்பட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்தவர்களின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த 3 பேர் உரிய ஆவணங்கள் இன்றி 8 லேப்டாப், குங்குமப்பூ, வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவற்றை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

சோதனையின்போது ஒரு வாலிபர் தனது உடலில் 50 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்திருந்தார். அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.

இதுதொடர்பாக 3 வாலிபர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்க்ள.

அதே போல சென்னையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த இலங்கையை சேர்ந்த வாலிபர் திருதிருவென முழித்த நிலையில் அவர் நடத்தையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரது பையை சோதனை செய்தபோது ரூ.15 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டொலர்கள் இருந்தன.

இதற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers