திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் பாலியல் தொழிலாளிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து நிலையத்தில் பயணிகள் தங்கும் விடுதி உள்ளது, இங்கு பாலியல் தொழில் ஜோராக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக போதையில் இருக்கும் பெண்கள் இளைஞர்களுக்கு வலைவீசுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் காயத்ரி என்ற பெண், இளைஞர்களை அழைத்துள்ளார், இதைப் பார்த்த பெண் பொலிஸ் அதிகாரி தட்டிக்கேட்க சென்ற போது காயத்ரி, பொலிசின் மேல்சட்டையை கிழித்தாக தெரிகிறது.
இதனால் அவமானப்பட்ட பொலிஸ் அதிகாரி, கூச்சத்துடன் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார், எனினும் காயத்ரி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மறுபடியும் அவரது வேலையை தொடர்ந்துள்ளார்.
இது இப்படியே தொடர்ந்தால் நிலைமை மோசமாகும், எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது.