பிரபல தமிழ் நடிகர் உடல் நசுங்கி பலி! பேருந்தில் சென்ற போது நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

பிரபல தமிழ் துணை நடிகர் மதன்ராஜ் சென்ற சொகுசுப் பேருந்து விபத்துகுள்ளானதால், அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உடல் நசுங்கி பலியானார்.

தமிழகத்தின் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் மதன். தொலைக்காட்சி சீரியல்களில் துணை நடிகரான இவர் நேற்றிரவு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தில் சென்றுள்ளார்.

அப்போது மேலூர் அடுத்த வஞ்சிநகரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென ஓட்டுநரின் கடடுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் தலைக்குப்பிற கவிழ்ந்தது. இதில் நடிகர் மதன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிபாதமாக உயிரிழந்தார்.

மேலும் படுகாயம் அடைந்த 15-க்கும் மேற்பட்டோர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு செல்லப்பட்டனர்.

சிலர் உயிருக்கு ஆபத்து நிலையில் உள்ளதாகவும், தற்போதைக்கு டிவி.நடிகர் மதன் மட்டுமே உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...