உலகின் கோடீஸ்வர தமிழர்கள் இவர்கள்தான்!

Report Print Deepthi Deepthi in இந்தியா

உலகின் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள தமிழர்களின் பெயர்கள் குறித்து பார்ப்போம்,

ஷிவ் நாடார்

தமிழகத்தை சேர்ந்த இவரது சொத்து மதிப்பு 1,330 கோடி ஆகும். கோயம்புத்தூரில் தனது கல்லூரி படிப்பை முடித்த இவர், HCL என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்திய அளவில் புகழ்பெற்ற பன்னாட்டு தகவல் சேவை நிறுவனம்.

இந்துஸ்தான் பொறியியல் லிமிடெட் (HCL)-இன் தலைமை செயல் அதிகாரி மற்றும் ஷிவ் நாடார் அறக்கட்டளையின் தலைவரும் ஆவார்.

2008ஆம் ஆண்டில், இந்திய அரசு, தகவல் தொழில்நுட்பத் துறையில், இவரின் மகத்தான பங்களிப்பிற்காக இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’ அளித்து கெளரவித்தது.

கலாநிதி மாறன்

சன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனர். இந்திய விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டின் முக்கிய பங்குதாரராகவும் இருக்கிறார் .

1990 ஆம் ஆண்டில் தனது தொழிலை தொடங்கிய இவர், ஆரம்பத்தில் தமிழ் நாளிதழை ஆரம்பித்து அதன் பின்னர், சன் தொலைக்காட்சியை தொடங்கினார். இளம் தொழிலதிபர் என்ற விருதினை பெற்றுள்ள இவர், தென்னிந்தியாவின் சிறந்த Television King என போர்ப்ஸ் நாளிதழ் அறிவித்தது.

இவரது சொத்து மதிப்பு 480 கோடி ஆகும்.

ராம் ஸ்ரீராம்

சென்னையில் பிறந்த இவர் அமெரிக்க தொழிலதிபர் ஆவார். இவர் கூகுள் முதலீட்டாளர்களில் ஒருவர் ஆவார். இவரது சொத்து மதிப்பு 210 கோடி ஆகும். இவர் கூகுளில் 3.4 மில்லியன் பங்குகளை வைத்திருக்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...