எல்லாம் பறிபோய்விட்டது: சின்மயி புலம்பல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பாடும் வாய்ப்பு மற்றும் பின்னணி குரல் கொடுக்கும் வாய்ப்புகள் பறிபோய்விட்டது என பாடசி சின்மயி இந்து நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, மாதத்துக்கு 10 முதல் 15 பாடல்கள் பாட வாய்ப்பு கிடைக்கும். அவற்றில் குறைந்தது 5 பாடல்கள் தமிழில் இருக்கும்.

ஆனால், இப்போது எனது பாடல் வாய்ப்புகள் பறிபோயிருக்கின்றன. அதோடு, படங்களுக்கு டப்பிங் பேசும் வாய்ப்பும் இல்லை.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனிலிருந்து என்னை நீக்கிவிட்டார்கள். அதனால் , அந்த வாய்ப்பும் வரவில்லை.

பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் துன்புறுத்தல் என்றால்தான் வழக்கு பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருக்கிறது.

ஆனால், சினிமா தொழிலாளர்களான நாங்கள் ஃப்ரீலேன்சர்கள் என்ற பட்டியலில்தான் இருக்கிறோம்.

எங்களுக்கான வேலை இடம் எது என்பதை எப்படி உறுதிசெய்வது? எனவேதான் புதிய சட்டம் வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers