மைத்துனியை ஒருதலையாக காதலித்த இளைஞர்: நேர்ந்த விபரீத சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் பத்தாம் வகுப்பு மாணவியை கொடூரமாக கொலை செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நவீன் (28). இவர் கீர்த்தனா என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார்.

நவீனின் இளைய சகோதரரை தான் கீர்த்தனாவின் சகோதரி திருமணம் செய்துள்ளார். இதையடுத்து கீர்த்தனாவின் வீட்டுக்கு அடிக்கடி நவீன் சென்று வந்துள்ளார். தம்பியின் மனைவி போலவே கீர்த்தனாவும் நவீனுக்கு மைத்துனி உறவுமுறை என்ற நிலையில் அவரை நவீன் காதலிக்க தொடங்கினார்.

மேலும் தனக்கு கீர்த்தனாவை திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோரை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் நவீனுக்கு கெட்ட பழக்கங்கள் இருந்ததால் கீர்த்தனாவின் பெற்றோர் இதற்கு ஒப்பு கொள்ளவில்லை. மேலும் கீர்த்தனாவும் நவீனின் காதலை ஏற்கவில்லை.

இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்த நவீன், நேற்று கீர்த்தனா பள்ளிக்கூடத்துக்கு செல்லும் போது வழிமறித்து கோடாரியால் அவரை சரமாரியாக அடித்து கொன்றுள்ளார்.

பின்னர் வீட்டுக்கு சென்று நவீன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரை காப்பாற்றிய குடும்பத்தார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை முடிந்த நிலையில் பொலிசார் நவீனை கைது செய்துள்ளனர், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers