எழுவர் விடுதலைக்காக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்: குவியும் திரைபிரபலங்கள் ஆதரவு

Report Print Vijay Amburore in இந்தியா

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி #28YearsEnoughGovernor என்ற ஹாஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவகாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் கடந்த 28 வருடங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் எழுவரையும் சட்டப் பிரிவு 161ன்கீழ் தமிழக அரசு விடுதலை செய்யலாம் என நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த செப்டம்பர் 6-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதனையடுத்து விரைந்து செயல்பட்ட தமிழக அரசு, அமைச்சரவை கூட்டி எழுவரையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.


ஆனால் இன்று வரையிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கையெழுத்திடாமல் தாமதித்து வருகிறார். இதற்கு பல்வேறு பக்கங்களில் இருந்து கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், இணையதளவாசிகள் பலரும் #28YearsEnoughGovernor என்ற ஹாஸ்டேக் மூலம் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் ராம் உள்ளிட்டவர்களும் எழுவரும் ஆதரவாக ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers