வேகமாக வந்த ரயில்முன் திடீரென பாய்ந்த தாய்: துணிந்து செயல்பட்ட 16 வயது மகள்

Report Print Vijay Amburore in இந்தியா

மும்பையில் திடீரென ரயில்முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாயை காப்பாற்ற சென்ற 16 வயது மகளும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பை ஜோகேஸ்வரி ரயில் நிலையத்தில், வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் முன் பெண் ஒருவர் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

உடனே ஒரு சிறுமி தண்டவாளத்திற்குள் புகுந்து அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக இருவருமே தண்டவாளத்தில் சிக்கி கொண்டனர். வேகமாக வந்த ரயில் இருவரின் மீதும் மோதி சென்றது.

இதனை பார்த்த ரயில்வே நிர்வாகம் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் தற்போது சிறுமி அபாய கட்டத்திலிருந்து வெளியே வந்துள்ளார். ஆனால் அவருடைய தாய் பலத்த காயங்களுடன் இன்னும் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சுனிதா வித்ஹலே என்ற 38 வயது பெண், என்பதும் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டது அவருடைய மகள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் சுனிதா தன்னுடைய வலது கையினை இழந்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers