17 வயது சிறுவனை திருமணம் செய்து குழந்தை பெற்றெடுத்த பெண்

Report Print Vijay Amburore in இந்தியா

மும்பையில் 17 வயது சிறுவனை திருமணம் செய்த இளம்பெண்ணை போக்ஸோ சட்டத்தின் கீழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த 17 வயது சிறுவனின் தாய் ஒருவர், 22 வயது இளம்பெண் அவருடைய பெற்றோர் மற்றும் சகோதரருடன் தன்னுடைய வீட்டில் அத்து மீறி நுழைந்து குடும்பத்தாரை மிரட்டுவதாக பொலிஸாரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரில், சம்மந்தப்பட்ட இளம்பெண் கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று தங்களுடைய 17 வயது மகனை திருமணம் செய்துகொண்டதாக கூறிக்கொண்டு வீட்டிற்குள் குடியேறினார்.

அதற்கு நானும் என்னுடைய கணவரும் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்கொலை செய்துகொள்வேன் என எங்களை மிரட்டுகிறார். அந்த பெண்ணால் எங்களுடைய மாணவன் 10-ம் வகுப்பில் தோல்வியடைந்துவிட்டான் என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து சம்மந்தப்பட்ட இளம்பெண் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிஸார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு வழக்கு விசாரணையின் போது தனக்கு, 17 வயது சிறுவனால் பிறந்த 5 மாத குழந்தை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

அந்த குழந்தையையும் சிறையில் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers